Saturday, June 20, 2009

என் படைப்புகளில் சில

ஒவ்வொரு நாளும் நான் என் மானிட்டரின் முன் உட்காரும் போதும் ஜி டாக்கிலிருந்து வந்து
”ஹாய் குட் மார்னிங் have a gr8 day” என்று சொல்லும் ஒரு பாப் அப். அதைப்பார்த்ததும் என் முகத்தில் பூக்கும் புன்முறுவல்.

நான் நேரில் பார்த்திராத அவள் ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். காலப்போக்கில் நல்ல நண்பர்களானோம் நாங்கள். எப்போதெல்லாம் நான் பிரச்சனையுடன் யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேனோ அப்போதெல்லாம் அதைப் பகிர்ந்து கொள்ள நான் தேர்ந்தெடுப்பது அவளைத் தான் ஏனென்றால் அவள் எப்போதுமே ஆன் லைனில் இருந்து தான் வேலை செய்து கொண்டிருப்பாள்.

எப்போதுமே ”டோண்ட் ஒர்ரி நான் ப்ரே பண்ணிக்கிறேன்” என்று பதில் தருவாள்.

அந்த ஒரு வரி என்னைச் சரியாக்கிவிடும்.
பிரச்சனை முடிந்ததும் சொல்வாள், “நான் சொன்னேன் இல்லையா பிரச்சனை சரியாயிடும்னு?” என்பாள்.

நாட்கள் கடந்தன...
சில நாட்களாகவே ஜி டாக், பாப் அப்புகள் என் மானிட்டரில் முளைப்பதில்லை, குறிப்பாக அவளுடையது.ஒரு வாரத்துக்குப் பின் காரணம் கேட்டு நான் அனுப்பிய என் மெயில் பதில் கொண்டுவரவில்லை.சில நாட்களுக்குப் பின் மீண்டும் அவளது வரி பாப் அப்பானது. "hi good morning have a gr8 day"

மகிழ்ந்தேன்... ”

ஏன் இத்தனை மவுனம்” என்றேன்.

”வேலையிலிருந்து தூக்கிட்டாங்க” என்றாள்

”என்ன ஆச்சு” ஊமையாகிப் போன நான் கேட்டேன்.

“வழக்கம் போல வேலையைச் செஞ்சுட்டு இருந்தேன். வெளியே போக வழியக் காட்டினார் மானேஜர்” என்றாள்.பதில் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

" r u there". என்றாள்.

பாரமான இருதயத்துடன் என் இடது கை சுட்டு விரலால் "s" சொன்னேன்.

“கடவுள் கைவிட மாட்டார்னு எனக்குத் தெரியும். விலகவும் மாட்டார். இப்போ வேலை தேடிட்டுத் தான் ஆன்லைன்ல இருக்கேன்” என்றாள்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு...

”டோண்ட் ஒர்ரி நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” என்றேன்.

அவள் ஸ்மைலி மூலம் சிரித்தாள்.

நான் அழுதேன்!!!!!!


எட்வினா கார்த்திகா ராஜ்குமார்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete